தமிழக செய்திகள்

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை 29-ந் தேதிக்கு ஒத்திவைப்பு

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை வரும் 29-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

ஊட்டி,

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பாக தற்போது மறு விசாரணை நடந்து வருகிறது. இதற்காக அமைக்கப்பட்டுள்ள 5 தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் பலரிடமும் விசாரணை நடத்தி உள்ளனர்.

இது தெடர்பான வழக்கு ஊட்டி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இன்று கொடநாடு தொடர்பான வழக்கு ஊட்டியில் உள்ள மகளிர் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. விசாரணையையொட்டி சயான், வாளையார் மனோஜ் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்தனர்.

இந்த வழக்கில் தொடர்புடைய திபு என்பவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை. இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி விசாரணையை வருகிற 29-ந் தேதிக்கு ஒத்திவைத்தார்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு