தமிழக செய்திகள்

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை அக்டோபர் 1-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பான விசாரணையை அக்டோபர் 1-ம் தேதிக்கு ஒத்திவைத்து ஊட்டி கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

தினத்தந்தி

ஊட்டி,

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கோடநாடு எஸ்டேட்டில் 24.4.2017 அன்று காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டார். மேலும் எஸ்டேட் பங்களாவில் இருந்த பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டது. இதுதொடர்பாக சயான் உள்பட 10 பேரை கோத்தகிரி போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை ஊட்டி கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் ஊட்டி கோர்ட்டில் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பான விசாரணை நீதிபதி சஞ்சய் பாபா முன்னிலையில் இன்று நடைபெற்றது. அப்போது வழக்கு விசாரணை தொடர்பாக அரசு தரப்பில் அவகாசம் கேட்கப்பட்டது. கால அவகாசம் கோரியதை அடுத்து வழக்கு விசாரணையை அக்டோபர் 1-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

அதன்பின்னர் வழக்கு தொடர்பாக அரசு தரப்பு வழக்கறிஞர் ஷாஜகான் செய்தியாளர்களுக்கு விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கோடநாடு வழக்கு தொடர்பான அனைத்து உண்மைகளும் வெளிவர வேண்டும். புலன் விசாரணை தொடங்கி நடைபெற்று வருகிறது என்று கூறினார்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை