தமிழக செய்திகள்

கோயம்பேடு காய்கறி சந்தையில் மீண்டும் தக்காளி விலை கிடுகிடு உயர்வு..!

கோயம்பேடு காய்கறி சந்தையில் மீண்டும் தக்காளி விலை கிடுகிடு உயர்ந்துள்ளது.

தினத்தந்தி

சென்னை,

தமிழகத்தில் தக்காளி விலை திடீரென உயர்ந்து உள்ளது. சில்லரை விற்பனை கடைகளில் ஒரு கிலோ ரூ.90 முதல் ரூ.110 வரை விற்பனை செய்யப்பட்டது. இந்த திடீர் விலையேற்றத்தை கட்டுப்படுத்தும் விதமாக தமிழக அரசு பண்ணை பசுமை காய்கறி கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.60-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனை மக்கள் வாங்கி சென்றனர். தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்தார்.

இதையடுத்து நேற்று கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளி விலை சற்று குறைந்து (மொத்த விலை) ரூ.60-ஆக விற்பனை செய்யப்பட்டது. சில்லறை விற்பனை நிலையங்களில் தக்காளி கிலோவுக்கு ரூ.60-ல் இருந்து ரூ.65 வரை விற்பனை செய்யப்பட்டது. கோயம்பேடு சந்தைக்கு நேற்று வரை சுமார் 700 டன் தக்காளி வந்தது.

இந்த நிலையில், சென்னை, கோயம்பேடு காய்கறி சந்தையில் மீண்டும் தக்காளி விலை கிடுகிடு உயர்ந்துள்ளது. வரத்து குறைவால், ஒரேநாளில் ரூ.60-க்கு விற்ற தக்காளி, 15 ரூபாய் உயர்ந்து ரூ.75-க்கு விற்பனை செய்யப்படுகிறது. புறநகர் பகுதிகளில் தக்காளி சில்லறை விற்பனை ரூ.80 முதல் ரூ.90 வரை விற்பனை என தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு