தமிழக செய்திகள்

வரதராஜ பெருமாள் கோவிலில் கிருஷ்ணஜெயந்தி விழா

சிறுபாக்கம் வரதராஜ பெருமாள் கோவிலில் கிருஷ்ணஜெயந்தி விழா நடைபெற்றது.

தினத்தந்தி

சிறுபாக்கம், 

சிறுபாக்கத்தில் வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் கிருஷ்ண ஜெயந்தியையொட்டி நேற்று இரவு கிருஷ்ணர் பிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர்  வரதராஜ பெருமாள் மற்றும் சஞ்சீவிராயர் ஆகிய சாமிகளுக்கு பல்வேறு விதமான பொருட்களால் சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. பின்னர் கோவிலின் முன்பு உறியடி மற்றும் வழுக்கு மரம் ஏறும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். பின்னர், இரவில் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் சாமி வீதிஉலா நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் அப்பகுதி மக்கள் செய்திருந்தனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து