கோப்புப்படம்  
தமிழக செய்திகள்

கிருஷ்ணகிரி: பள்ளிக்குள் புகுந்து 8-ம் வகுப்பு மாணவியை கடித்து குதறிய வெறி நாய்..!

கிருஷ்ணகிரியில் பள்ளி வளாகத்திற்குள் நுழைந்த வெறிநாய், கடித்து குதறியதில் 8ம் வகுப்பு மாணவி படுகாயம் அடைந்தார்.

தினத்தந்தி

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரியில் பள்ளி வளாகத்திற்குள் நுழைந்த வெறிநாய், கடித்து குதறியதில் 8ம் வகுப்பு மாணவி படுகாயம் அடைந்தார்.

அரசம்பட்டியில் உள்ள அரசு பள்ளியில் படித்து வரும் மாணவி ஆஷினியை பள்ளிக்குள் புகுந்த வெறி நாய் ஒன்று விரட்டி சென்று கடித்ததில், சிறுமி படுகாயம் அடைந்துள்ளார். மேலும், சிறுமியின் கண் பார்வையும் பாதிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே நாய் கடித்து குதறிய போது ஆசிரியர்கள் பார்த்துக்கொண்டிருந்ததாகவும், அவர்கள் குழந்தைக்கு எந்த விதமான உதவியும் செய்யவில்லை என்றும் புகார் எழுந்துள்ளது.

மேலும், சம்பந்தப்பட்ட ஆசிரியர், தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாணவியின் சிகிச்சைக்கு உதவவேண்டும் என்றும் பெற்றோர் ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். 

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து