பாப்பிரெட்டிப்பட்டி:
பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள பையர்நத்தம் கிராமத்தில் மயிலை மலை அடிவாரத்தில் அமிர்தேஸ்வரர், அமிர்தாம்பிகை கோவிலில் பவுர்ணமியை முன்னிட்டு சாமிக்கு சிறப்பு பூஜை மற்றும் கிரிவலம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு மலையை சுற்றி கிரிவலம் சென்று சாமியை தரிசனம் செய்தனர். இதையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.