தமிழக செய்திகள்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன் கே.எஸ்.அழகிரி சந்திப்பு - தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை

தொகுதி பங்கீடு குறித்து திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து காங்கிரஸ் கட்சியினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

தினத்தந்தி

சென்னை,

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள திமுக தலைவர் ஸ்டாலின் இல்லத்தில் காங்கிரஸ் கட்சியினருடன் திமுகவினர் தற்போது ஆலோசனை நடத்தி வருகின்றனர். திமுக தரப்பில் திமுக தலைவர் ஸ்டாலின், பொதுச்செயலாளர் துரைமுருகன் உள்ளிட்டோர் இந்த ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர்.

காங்கிரஸ் தரப்பில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், கே.ஆர்.ராமசாமி உள்ளிட்டோர் ஆலோசனையில் பங்கேற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சட்டமன்ற தேர்தலில் திமுக-காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு செய்வது குறித்து இழுபறி நீடித்து வந்தது. இந்த நிலையில் தற்போது இரு கட்சியினருக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படும் பட்சத்தில் காங்கிரஸ் கட்சிக்கு 24 தொகுதிகள் ஒதுக்கீடு செய்ய வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது