தமிழக செய்திகள்

முத்தாரம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

தனது உருவப்படத்தை 5 நிமிடங்களில் வரை மாணவரை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.

களக்காடு:

களக்காடு அருகே உள்ள நடுச்சாலைப்புதூர் முத்தாரம்மன் கோவில் கும்பாபிஷேக விழா கடந்த 6-ந் தேதி தொடங்கியது. இதையொட்டி தினமும் காலை, மாலையில் சிறப்பு யாகசாலை பூஜைகள் நடந்து வந்தது. விழாவின் 3-ம் நாளான நேற்று கும்பாபிஷேக விழா நடந்தது. இதனை முன்னிட்டு அதிகாலையில் மங்கள இசை, கணபதி பூஜையை தொடர்ந்து சுவாமிகளுக்கு காப்பு கட்டப்பட்டது. அதன் பின்னர் 4-ம் கால யாகசாலை பூஜைகள், மகா பூர்ணாகுதி, தீபாராதனை நடத்தப்பட்டது. தாடர்ந்து கோபுர கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டு, கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னர் முத்தாரம்மன் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு, மகா அபிஷேகம், அலங்கார தீபாராதனைகள் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்