தமிழக செய்திகள்

மணகாவல பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்

கடையம் அருகே உள்ள திருமலையப்பபுரம் மணகாவல பெருமாள் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது.

தினத்தந்தி

கடையம்:

கடையம் அருகே திருமலையப்பபுரத்தில் மணகாவல பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மணகாவல பெருமாள் சீதா லட்சுமண ராமச்சந்திரமூர்த்தி சமேத ஆஞ்சநேயர் சுவாமி சன்னதிக்கு புதிய விமானம், கல் மண்டபம், கல் கோபுரம் அமைக்கப்பட்டு கும்பாபிஷேக விழா நடந்தது. கடந்த 29-ந்தேதி முதல் கால பூஜையுடன் விழா தொடங்கி பல்வேறு பூஜைகள் நடந்து வந்தன. நேற்று காலை 6-ம் கால பூஜையை தொடர்ந்து கோபுரம், விமானம், சுவாமி-அம்பாள் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் மற்றும் அபிஷேகம், சிறப்பு தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து காண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு