தமிழக செய்திகள்

குருத்தோலை ஞாயிறு ஊர்வலம்

திருவாரூரில் குருத்தோலை ஞாயிறு ஊர்வலம் நடந்தது.

தினத்தந்தி

கொரடாச்சேரி:

திருவாரூரில் குருத்தோலை ஞாயிறு ஊர்வலம் நடந்தது.

தவக்காலம்

கிறிஸ்தவர்கள் 40 நாட்கள் கடைபிடிக்கப்படும் தவக்காலத்தில் முக்கிய நிகழ்வுகளில் ஒன்று குருத்தாலை ஞாயிறு. ஏசு கிறிஸ்து ஜெருசலேம் நகருக்குள் மீண்டும் வெற்றிக் களிப்புடன் நுழைந்ததை குருத்தோலையுடன் வரவேற்றதை நினைவு கூரும் நாளாக குருத்தோலை ஞாயிறு கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாளை உலகெங்கும் உள்ள கிறிஸ்தவர்கள் ஆண்டு தோறும் கொண்டாடி வருகின்றனர்.

குருத்தோலை ஞாயிறு ஊர்வலம்

திருவாரூரில் குருத்தோலை ஞாயிறு ஊர்வலம் நேற்று நடந்தது. திருவாரூர் பாத்திமா பள்ளி வளாகத்தில் இருந்து தொடங்கிய குருத்தோலை ஞாயிறு முக்கிய வீதிகளின் வழியாக சென்று பாத்திமா அன்னை ஆலயம் வந்தடைந்தது.

இந்த நிகழ்ச்சிக்கு திருவாரூர் பங்கு தந்தை ஜெரால்டு தலைமை தாங்கினார். இதில் பாத்திமா அன்னை ஆலய நிர்வாகிகள் உள்பட ஏராளமான கிறிஸ்தவர்கள் குருத்தோலைகளை கையில் ஏந்தி ஊர்வலமாக சென்றனர்.

திருத்துறைப்பூண்டி

திருத்துறைப்பூண்டி புனித லூர்து அன்னை ஆலயம் சார்பில் குருத்தோலை ஞாயிறு ஊர்வலம் நடந்தது. புனித தெரசாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இருந்து தொடங்கிய குருத்தோலை ஞாயிறு ஊர்வலம் முக்கிய வீதிகளின் வழியாக சென்று புனித லூர் அன்ன ஆலயம் அடைந்தது. இதில் பங்குத்தந்தை பிரான்சிஸ் சேவியர், துணை பங்கு தந்தை பீட்டர் டேமியான் துரைராஜ் மற்றும் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு கையில் குருத்தோலையை ஏந்தி சென்றனர்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்