தமிழக செய்திகள்

முத்துமாரியம்மன் கோவிலில் குத்துவிளக்கு பூஜை

முத்துமாரியம்மன் கோவிலில் குத்துவிளக்கு பூஜை நடைபெற்றது.

வடகாடு:

வடகாடு முத்துமாரியம்மன் கோவிலில் வருடாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. மாலையில் குத்துவிளக்கு பூஜை நடந்தது. இதில் இப்பகுதி பெண்கள் கலந்து கொண்டு குத்துவிளக்கிற்கு குங்குமத்தால் அர்ச்சனை செய்து தீபாராதனை காண்பித்து வழிபட்டனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.