சமயபுரம்:
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பவுர்ணமியையொட்டி நேற்று உற்சவர் மண்டபத்தின் முன்பு குத்துவிளக்கு பூஜை நடைபெற்றது. இந்த பூஜையில் 108 பெண்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து உற்சவர் அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. பூஜையில் கலந்து கொண்ட பெண்களுக்கு பித்தளை காமாட்சி அம்மன் விளக்கு மற்றும் பூஜை பொருட்கள், புடவை உள்பட 22 பொருட்கள் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் கல்யாணி தலைமையில் பணியாளர்கள் செய்திருந்தனர்.