தமிழக செய்திகள்

போக்குவரத்து தொழிற்சங்கங்களுக்கு தொழிலாளர் நல ஆணையம் அழைப்பு

சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

தினத்தந்தி

சென்னை,

6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தெழிலாளர்கள் கடந்த 9-ந்தேதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து வேலை நிறுத்தத்தை தடை செய்யக்கோரி சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டது.இந்த மனு மீதான விசாரணையில் பொது மக்களின் நலன் கருதி வேலை நிறுத்தத்தை ஒத்தி வைப்பதாக தொழிற்சங்கங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் நேற்று முதல் வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்ட தொழிலாளர்கள் பணிக்கு திரும்பி விட்டனர்.

இந்த வரும் 19-ம் தேதி போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் மீண்டும் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெறும் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.

இந்த நிலையில் முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு போக்குவரத்து தொழிற்சங்கங்களுக்கு தொழிலாளர் நல ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது. 19-ம் தேதி மதியம் 12 மணியளவில் சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு