தமிழக செய்திகள்

பொதட்டூர்பேட்டையில் சிறுமியை கடத்தி சென்ற தொழிலாளி கைது

பொதட்டூர்பேட்டையில் சிறுமியை கடத்தி சென்ற தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

தினத்தந்தி

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா பொதட்டூர்பேட்டை காலனியை சேர்ந்த 16 வயது சிறுமி கடந்த 8-ந் தேதி கடைக்கு சென்ற நிலையில், நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பாமல் மாயமானார். இதனால் அச்சமடைந்த பெற்றோர் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்காததால், பொதட்டூர்பேட்டை போலீசில் புகார் செய்தனர்.

சப்-இன்ஸ்பெக்டர் சிவா வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினார். அப்போது சிறுமியை மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியை சேர்ந்த கார்த்திக் (30) என்ற கூலித்தொழிலாளி கடத்திச் சென்றது தெரியவந்தது. இவர் சில தினங்களுக்கு முன் பொதட்டூர்பேட்டை பகுதியில் கட்டிட வேலைக்கு கூலி தொழிலாளியாக வேலை பார்த்த நிலையில், சிறுமியுடன் பழகி ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்று கார்த்திக்கை கைது செய்து சிறுமியை பத்திரமாக மீட்டனர்.

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு