தமிழக செய்திகள்

திருத்தணி அருகே கிணற்றில் கூலி தொழிலாளி சடலமாக மீட்பு - கொலையா? போலீஸ் விசாரணை

திருத்தணி அருகே கிணற்றில் கூலி தொழிலாளி சடலமாக மீட்கப்பட்டார். அவர் கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினத்தந்தி

திருத்தணி ஒன்றியம் முருக்கம்பட்டு கிராமத்தில் சென்னை சேர்ந்த ஒருவருக்கு சொந்தமான விவசாய கிணறு ஒன்று உள்ளது. இந்த கிணற்றில் 30 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் ஒன்று மிதப்பதாக பொதுமக்கள் திருத்தணி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற திருத்தணி போலீசார் கிணற்றில் மிதந்த ஆண் சடலத்தை தீயணைப்புத் துறையினர் உதவியுடன் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் போலீசார் நடத்திய முதற் கட்ட விசாரணையில் கிணற்றில் இறந்து கிடந்த நபர் தரணிவராகபுரம் கிராமத்தைச் சேர்ந்த பார்த்திபன் (வயது 28). என்பதும் கூலிவேலை செய்யும் இவர் நேற்று முன்தினம் வேலைக்கு சென்று வீடு திரும்பாத நிலையில் நேற்று கிணற்றில் பிணமாக மிதந்து கிடந்தது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த திருத்தணி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஏழுமலை இறந்து கிடந்த பார்த்திபன் கொலை செய்து வீசப்பட்டாரா? அல்லது தற்கொலையா என்று விசாரணை நடத்தி வருகின்றார்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்