தமிழக செய்திகள்

திருவாலங்காடு அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் தொழிலாளி பலி

திருவாலங்காடு அருகே நாய் குறுக்கே வந்ததால் ஏற்பட்ட மோட்டார் சைக்கிள் விபத்தில் தொழிலாளி பலியானார்.

தினத்தந்தி

திருவாலங்காடு ஒன்றியம் அத்திப்பட்டு ஊராட்சியை சேர்ந்தவர் குமரேசன் (வயது 41). இவர் சென்னை அம்பத்தூர் பகுதியில் லேத் பட்டரை வைத்து தொழில் செய்து வந்தார்.

இவர் தினமும் அத்திப்பட்டு கிராமத்தில் இருந்து திருவாலங்காடு ரெயில் நிலையம் வரை மோட்டார் சைக்கிளில் சென்று அங்கிருந்து ரெயில் மார்க்கமாக அம்பத்தூர் சென்று இரவு வழக்கம் போல வீடு திரும்புவது வழக்கம்.

இந்நிலையில் கடந்த 4-ந் தேதி வழக்கம் போல் அம்பத்தூருக்கு வேலைக்கு சென்று விட்டு குமரேசன் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பி கொண்டிருந்தார்.

கனகம்மாசத்திரம் மாநில நெடுஞ்சாலையில் புளியங்குண்டா கிராமம் அருகே மோட்டார் சைக்கிள் வந்த போது திடீரென சாலையின் குறுக்கே நாய் பாய்ந்தது. அதன் மீது மோதி மோட்டார் சைக்கிளில் இருந்து அவர் கீழ விழுந்து படுகாயமடைந்தார். அவரை மீட்ட அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த குமரேசன் நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து திருவாலங்காடு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து