தமிழக செய்திகள்

சங்கராபுரம் அருகே டிராக்டர் மோதி தொழிலாளி பலி

சங்கராபுரம் அருகே டிராக்டர் மோதி தொழிலாளி உயிழந்தா.

சங்கராபுரம், 

சங்கராபுரம் அருகே உள்ள பூட்டை கிராமத்தை சேர்ந்தவர் குமார் (வயது 55), கூலி தொழிலாளி. சம்பவத்தன்று இவர் மாதவச்சேரியில் உள்ள தனது மகள் ராஜேஸ்வரியை பார்ப்பதற்காக உறவினர் சோழம்பட்டை சேர்ந்த ஏழுமலை மகன் சிவசங்கர் (21) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் சென்றார். பின்னர் அங்கு ராஜேஸ்வரியை பார்த்து விட்டு இருவரும் அதே மோட்டார் சைக்கிளில் ஊருக்கு புறப்பட்டனர். மோட்டார் சைக்கிளை சிவசங்கர் ஓட்டினார். கொசப்பாடி ஏரிக்கரை அருகே வந்து கொண்டிருந்தபோது செல்லம்பட்டில் இருந்து பாலப்பட்டு நோக்கி சென்ற டிராக்டர், இவர்கள் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த குமார் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். பலத்த காயமடைந்த சிவசங்கரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லோகேஸ்வரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்