விழுப்புரம் அருகே உள்ள சிந்தாமணி கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் சதீஷ் (வயது 31), கூலித்தொழிலாளி. இவருக்கு திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகிறது. ஒரு ஆண் குழந்தையும், ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். இவருடைய மனைவி அதிஷ்டலட்சுமி சாலை விபத்தில் சிக்கி காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு வலிதாங்க முடியாமல் கடந்த 6 மாதத்திற்கு முன்பு தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். அதிலிருந்து சதீஷ் மிகுந்த மனஉளைச்சலாகி குடிப்பழக்கத்திற்கு ஆளாகினார். இந்நிலையில் மனைவி இறந்த வேதனையில் சம்பவத்தன்று அவர், தனது வீட்டில் புடவையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்த புகாரின்பேரில் விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.