தமிழக செய்திகள்

சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை

சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த கூலி தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருவண்ணாமலை போக்சோ சிறப்பு கோர்ட்டு தீர்ப்பளித்தது.

தினத்தந்தி

சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த கூலி தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருவண்ணாமலை போக்சோ சிறப்பு கோர்ட்டு தீர்ப்பளித்தது.

கூலி தொழிலாளி

வந்தவாசி தாலுகா எஸ்.காட்டேரி பகுதியை சேர்ந்த அர்ஜூனன் மகன் ஆதிமூலம் (வயது 27), கூலி தொழிலாளி. இவர் கடந்த 2016-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 9-ந் தேதி 17 வயதுடைய சிறுமியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமி நடத்த சம்பவத்தை அவரது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் இது குறித்து தெள்ளார் போலீசில் புகார் செய்தனர்.

அதன் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஆதிமூலத்தை கைது செய்தனர். இந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை திருவண்ணாமலை ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் உள்ள போச்சோ வழக்குகளுக்கான சிறப்பு கோர்ட்டில் நடைபெற்று வந்தது.

10 ஆண்டு சிறை

இந்த நிலையில் இவ்வழக்கை விசாரித்த நீதிபதி பார்த்தசாரதி நேற்று தீர்ப்பு கூறினார். அதில் சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த ஆதிமூலத்திற்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5000 அபராதமும் விதித்தார். இதையடுத்து ஆதிமூலத்தை போலீசார் வேலூர் மத்திய சிறையில் அடைந்தனர்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்