தமிழக செய்திகள்

தஞ்சையில், இளம்பெண் தற்கொலை

தஞ்சையில், இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.

தஞ்சாவூர்:-

தஞ்சை மானம்புச்சாவடி அந்தோணியார் கோவில் தெருவை சேர்ந்தவர் தாமஸ்எடிசன். இவருடைய மனைவி காயத்ரி (வயது 28). இவருக்கு தீராத வயிற்று வலி இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக பல்வேறு டாக்டர்களிடம் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. இதனால் மனமுடைந்த காயத்ரி கடந்த 30-ந் தேதி வீட்டில் யாரும் இல்லாதபோது எலி மருந்தை தின்று மயங்கி விழுந்தார். இதையடுத்து அக்கம், பக்கத்தினர் காயத்ரியை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்ந்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தாமஸ் எடிசன் கொடுத்த புகாரின் பேரில் தஞ்சை கிழக்கு போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்