தமிழக செய்திகள்

பட்டதாரி பெண் விஷம் தின்று தற்கொலை

பட்டதாரி பெண் விஷம் தின்று தற்கொலை செய்து கொண்டார்.

பட்டுக்கோட்டை மருத்துவர்தெரு பகுதியை சேர்ந்தவர் சரவணன். இவருடைய மகள் மோகனப்பிரியா (வயது25). இவர் கல்லூரியில் எம்.ஏ. படிப்பு முடித்து விட்டு வீட்டில் இருந்தார். வீட்டு வேலை பார்க்காமல் தொடர்ச்சியாக டி.வி. பார்த்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதை அவர் தாயார் கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த மோகனப்பிரியா சம்பவத்தன்று வீட்டில் உள்ள எலி பேஸ்ட்டை (விஷம்) தின்றார். இந்த தகவலை வீட்டில் உள்ளவர்களுக்கு தெரிவிக்கவில்லை. இதனை தொடர்ந்து 2 நாட்கள் கழித்து அவர் தொடர்ச்சியாக வாந்தி எடுத்துள்ளார். இதையடுத்து குடும்பத்தில் உள்ளவர்கள் கேட்ட போது விஷம் தின்ற தகவலை தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை உடனடியாக பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தஞ்சையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். தொடர்ந்து சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த மோகனப்பிரியா அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார். இது பற்றிஅவருடைய உறவினர் ஞானப்பழம் பட்டுக்கோட்டை நகர போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்