தமிழக செய்திகள்

அங்காளம்மன் கோவிலில் லட்சதீப விழா

கலவை அங்காளம்மன் கோவிலில் லட்சதீப விழா நடைபெற்றது.

கலவை அங்காளம்மன் கோவிலில் ஆடி வெள்ளிக் கிழமையை முன்னிட்டு லட்ச தீப திருவிழா நடைபெற்றது. இதனை முன்னிட்டு கோவில் முழுவதும் லட்சதீப விளக்குகள் ஏற்றப்பட்டன. முன்னதாக அம்மன் அலங்கரிக்கப்பட்டு மேடையில் வைக்கப்பட்டது. பக்தர்களின் சிலம்பாட்டம் நடைபெற்றது. இத்திருவிழாவை சுவாமி சந்தானம், கோவில் நிர்வாகி சவுந்தரராஜன் ஆகியோர் நடத்தினர்