தமிழக செய்திகள்

லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் லட்சார்ச்சனை

நாமக்கல் நகராட்சிக்கு உட்பட்ட ராமாபுரம்புதூரில்,லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் லட்சார்ச்சனை தொடங்கியது.

தினத்தந்தி

நாமக்கல் நகராட்சிக்கு உட்பட்ட ராமாபுரம்புதூரில், லட்சுமி ஹயக்ரீவர் கேவில் உள்ளது. இங்கு ஆண்டு தேறும், பள்ளி மாணவ, மாணவிகள் கல்வி அபிவிருத்திக்காகவும், செய்யும் தெழிலில் ஏற்படும் சங்கடங்கள் நீங்கி, தெழில் அபிவிருத்தி அடையவும், ஹயக்ரீவர் சாமிக்கு, லட்சார்ச்சனை மற்றும் மகா யாகம் செய்வது வழக்கம்.

அதன்படி இந்த ஆண்டு விழா நேற்று சிறப்பு பூஜையுடன் தொடங்கியது. காலை 8 மணிக்கு ஹயக்ரீவர் சாமிக்கு லட்சார்ச்சனை தொடங்கியது. பின்னர் சாமி தங்க கவசத்தில் எழுந்தருளினார். தெடர்ந்து தலா 408 பேனா மற்றும் பென்சில்களால் மாலை தயார் செய்யப்பட்டு, சாமிக்கு சாத்தப்பட்டது. தொடர்ந்து இரவு 8 மணி வரை லட்சார்ச்சனை நடந்தது.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணிக்கு ஹயக்ரீவர் மகா யாகம், 11 மணிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடக்கிறது. மதியம் 1 மணிக்கு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சாமிக்கு சாத்தப்பட்ட பேனா வழங்கப்படும்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை