தமிழக செய்திகள்

லாலு பிரசாத் யாதவிற்கு வெற்றிகரமாக முடிந்த சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை - தேஜஸ்வி யாதவ் தகவல்

லாலு பிரசாத் யாதவிற்கு வெற்றிகரமாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை முடிந்துள்ளதாக தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

பீகார் முன்னாள் முதல்-மந்திரியும், ராஷ்ட்ரீய ஜனதாதள தலைவருமான லாலு பிரசாத் யாதவ் சிறுநீரக கோளாறால் அவதிப்பட்டு வந்தார். அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அவரது மகளே தந்தைக்கு சிறுநீரகம் தானமாக வழங்க முன் வந்துள்ளார்.

இதைத்தொடர்ந்து லாலு பிரசாத் யாதவுக்கு இன்று சிங்கப்பூரில் உள்ள மருத்துவமனையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது. இந்த நிலையில லாலு பிரசாத் யாதவிற்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்றது.

இந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்து ஆப்பரேஷன் தியேடரில் இருந்து ஐசியு படுக்கைக்கு லாலு அழைத்து செல்லப்பட்டதாக அவரது மகனும் பீகார் துணை முதல்-மந்திரியுமான தேஜஸ்வி யாதவ் டுவிட்டரில் தெரிவித்துள்ளார். மேலும், சிறுநீரக தானம் செய்த லாலுவின் மகள் ரோகினி நலமுடன் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்