தமிழக செய்திகள்

விழுப்புரம் ராகவேந்திரர் கோவிலில் விளக்கு பூஜை

விழுப்புரம் ராகவேந்திரர் கோவிலில் விளக்கு பூஜை நடந்தது.

விழுப்புரம் வண்டிமேட்டில் உள்ள ராகவேந்திரர் கோவிலில் ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகளின் 352-ம் ஆண்டு ஆராதனை விழா நேற்று முன்தினம் தொடங்கியது. தொடர்ந்து நேற்று அதிகாலை 5 மணிக்கு ராகவேந்திர சுவாமிகள் சுப்ரபாதம், விஷ்ணு சகஸ்ரநாமம், 7.30 மணிக்கு சாமிக்கு அபிஷேகம் நடந்தது. பின்னர் சாமிக்கு வெள்ளிக்கவசம் அணிவிக்கப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் காலை 8.30 மணியளவில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் பெண்கள் பலர் கலந்துகொண்டு விளக்கு ஏற்றி வழிபட்டனர். தொடர்ந்து, லட்சார்ச்சனை, மகா கணபதி ஹோமம், சுதர்சன ஹோமம், தன்வந்திரி ஹோமம், லட்சுமி குபேர ஹோமம், ராகவேந்திர அஷ்டாஷர ஹோமங்கள் நடைபெற்றன. இவை முடிந்ததும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அதன் பிறகு இரவு 7 மணியளவில் தியானமும், 8 மணிக்கு பல்லக்கு சேவா, ரதோற்சவ சேவாவும், 9 மணிக்கு மகா தீபாராதனையும் நடைபெற்றது.

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்