தேனி,
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் சூரியநல்லி அருகே உள்ள சின்னக்கானல் பகுதியில் வசிப்பவர் மோகன் (வயது 65). இவருடைய மனைவி அன்னத்தாய் (62). மோகன் தனது மனைவியுடன் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று வந்தார்.
கலெக்டர் அலுவலகத்துக்குள் வந்த அவர்கள், முதல் தளம் செல்லும் படிக்கட்டில் நின்று கொண்டு இருந்தனர். திடீரென அவர்கள் ஒரு கேனில் மறைத்து எடுத்து வந்த மண்எண்ணெயை தங்களின் உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர்.
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசாரும், அப்பகுதியில் நின்று கொண்டு இருந்த அலுவலர்கள் சிலரும் அவர்களை தீக்குளிக்க விடாமல் தடுத்து நிறுத்தினர். அவர்களிடம் போலீசாரும் அதிகாரிகளும் விசாரணை நடத்தினார்கள். சுமார் 1 மணி நேரம் நடந்த விசாரணையை தொடர்ந்து மோகனும், அவருடைய மனைவியும் மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவை சந்தித்தனர். கலெக்டரும் அவர்களிடம் சிறிது நேரம் விசாரணை நடத்தினார்.
தீக்குளிக்க முயன்றதற்கான காரணம் குறித்து தம்பதியிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:-