பெரம்பலூர்:
பெரம்பலூரில் தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் யூனியன் சார்பில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் உமாசந்திரன் தலைமை தாங்கினார். தமிழ்நாட்டில் நில அளவைத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும். பதவி உயர்வு வழங்க வேண்டும். நவீன மறு நிலஅளவை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
மேலும் நில அளவைத்துறை அலுவலர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி அடுத்த மாதம் (பிப்ரவரி) 8-ந் தேதி மாவட்ட அளவில் தர்ணா போராட்டம் நடத்துவது என்றும், 23-ந் தேதி மண்டல அளவில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் இருப்பது என்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக, அதன் நிர்வாகிகள் தெரிவித்தனர்.