நீலகிரி,
மண்சரிவு சீரமைப்பு பணிகள் காரணமாக நீலகிரி மலை ரெயில் சேவை வருகிற 18-ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது என ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
கடந்த மாதம் 23-ம் தேதி பெய்த கனமழையால், மேட்டுப்பாளையம் - ஊட்டி மலை ரெயில் பாதையில் பல இடங்களில் மண்சரிவு ஏற்பட்டது. தண்டவாளத்தின் மீது பெரிய பாறைகள், மண் மற்றும் மரங்கள் விழுந்தது. இந்த மண்சரிவு சீரமைப்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் இன்று (13.10.2026) வரை மேட்டுப்பாளையம் - ஊட்டி மலை ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டிருந்தது.
இந்த நிலையில் நீலகிரி மலை ரெயில் பாதையில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவு காரணமாக, மேட்டுப்பாளையம் - உதகமண்டலம் (ஊட்டி) இடையே இயக்கப்படும் குறிப்பிட்ட நீலகிரி மலை ரெயில் (NMR) சேவைகள் நாளை (14.11.2026) முதல் 18.11.2026 வரை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
மேட்டுப்பாளையம் - உதகமண்டலம் ரெயில் (ரெயில் எண்: 56136) நாளை (14.11.2026) முதல் 18.11.2026 வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. இதேபோல் உதகமண்டலம் - மேட்டுப்பாளையம் ரெயில் (56137) நாளை (14.11.2026) முதல் 18.11.2026 வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.
மேட்டுப்பாளையம் - உதகமண்டலம் ரெயில் (06171) 15.11.2026 அன்று ரத்து செய்யப்பட்டுள்ளது. உதகமண்டலம் - மேட்டுப்பாளையம் ரெயில் (06172) நாளை (14.11.2026) மற்றும் 16.11.2026 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
முன்பதிவு செய்த பயணிகளுக்குக் கட்டணம் முறைப்படி திரும்ப வழங்கப்படும். பயணிகள் தங்களின் பயணத் திட்டத்தை இதற்கு ஏற்ப மாற்றியமைத்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.