தமிழக செய்திகள்

சர்க்கரை குடும்ப அட்டையை அரிசி குடும்ப அட்டையாக மாற்றுவதற்கான காலக்கெடு நீட்டிப்பு

சர்க்கரை குடும்ப அட்டையை அரிசி குடும்ப அட்டையாக மாற்றுவதற்கான காலக்கெடு மூன்று நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

சென்னை,

தமிழகத்தில் ரேசன் பொருட்களை பெறுவதற்கான குடும்ப அட்டைகளில் 10 லட்சத்திற்கும் அதிகமானவை சர்க்கரை குடும்ப அட்டகளாக உள்ளன. இவற்றை அரிசி குடும்ப அட்டைகளாக மாற்ற விரும்புவோர் அதற்கான விண்ணப்பங்களை சமர்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது.

இந்த விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி இன்றோடு முடிவடையும் நிலையில் இதனை வரும் 29-ஆம் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் 10 லட்சத்திற்கும் அதிகமான சர்க்கரை குடும்ப அட்டைகள் உள்ள நிலையில் இதுவரை 1 லட்சம் விண்ணப்பங்கள் மட்டுமே பெறப்பட்டுள்ளன. எனவே விண்ணப்பங்களை சமர்ப்பிக்க மேலும் மூன்று நாட்கள் கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது.

சர்க்கரை குடும்ப அட்டையை அரிசி அட்டையாக மாற்ற விரும்புவோர் வட்ட வழங்கல் அலுவலர், உதவி ஆணையர் அலுவலகங்களில் விண்ணப்பிக்கலாம். மேலும், இணையதளம் வாயிலாக www.tnpds.gov.in என்ற இணையதள முகவரியிலும் தங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது