கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை தலைவிரித்து ஆடுகிறது - மத்திய மந்திரி எல்.முருகன்

திமுகவில் உள்ள பல கட்சிகளுக்கு பெரிய வாக்கு வங்கி கிடையாது என்று மத்திய மந்திரி எல்.முருகன் கூறியுள்ளார்.

ஆலந்தூர்,

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் மத்திய மந்திரி எல்.முருகன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை நிலவி கொண்டு இருக்கிறது. தென் மாவட்டங்களில் பட்டியலின மக்கள் மீது தாக்குதல், பிற பகுதிகளில் பெண்கள் மீது வன்கொடுமை என சட்டம்-ஒழுங்கு பிரச்சினை தலைவிரித்து ஆடுகிறது. தமிழகத்தில் அதிகரித்து உள்ள கஞ்சா உள்பட போதைப்பொருள்களை தடுப்பதில் திமுக அரசு தவறி விட்டது.

மக்கள் மிகப்பெரும் கோபத்தில் இருக்கிறார்கள். வரும் தேர்தலில் இது கண்டிப்பாக எதிரொலிக்கும். எரிபொருள் தட்டுப்பாடு என்று பொய் பிரசாரம் செய்து தமிழ்நாட்டில் மக்களிடம் பதற்றமான சூழ்நிலையை உருவாக்க திமுகவினர் சதி செய்கின்றனர்.

ரஜினி குறித்து ஆதவ் அர்ஜுனா விமர்சனம் செய்த விவகாரத்தில் அவருக்கு பின்னால் தேசிய ஜனநாயக கூட்டணி நிற்கும். தேசிய ஜனநாயக கூட்டணி வலிமையாக உள்ளது. திமுகவில் உள்ள பல கட்சிகளுக்கு பெரிய வாக்கு வங்கி கிடையாது. இவ்வாறு அவர் கூறினார்.