பெருங்குடியில்
சென்னையை அடுத்த பெருங்குடியில் தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் அருகே உள்ள மதுபான கடையால் கல்லூரிக்கு வரும் மாணவிகளுக்கு பெரும் தொல்லையாக உள்ளதால் உடனடியாக அந்த மதுக்கடையை அகற்ற வேண்டும். மேலும் மணிப்பூர் விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி 300-க்கும் மேற்பட்ட சட்டக்கல்லூரி மாணவ - மாணவிகள், கல்லூரி நுழைவு வாயில் முன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள், இனவெறி ஒழித்து ஜனநாயகத்தை காப்போம். கல்லூரி அருகே உள்ள மதுபான கடையை அகற்றுவோம் என கோஷமிட்டனர்.