தமிழக செய்திகள்

குழித்துறையில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்

குழித்துறையில் வக்கீல்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

தினத்தந்தி

களியக்காவிளை, ஆக.24-

குழித்துறையில் வக்கீல்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டம்

இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம் உள்ளிட்டவற்றை பேச்சு வழக்கில் இல்லாத வடமொழியில் மாற்றியதை கண்டித்து குழித்துறை வக்கீல் சங்கம் சார்பில் குழித்துறை கோர்ட்டு முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதற்கு குழித்துறை வக்கீல் சங்க தலைவர் சுரேஷ் தலைமை தாங்கினார். செயலாளர் பென்னட்ராஜ் முன்னிலை வகித்தார். பொருளாளர் விஜய் ஆனந்த், நிர்வாகிகள் ராஜ ஞான சிங், விஜூகுமார், கிறிஸ்டல் ராஜ், சுனில், சன்னி, டெல்பின் மற்றும் ஏராளமான வக்கீல்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது மத்திய அரசுக்கு எதிராக வக்கீல்கள் கோஷங்களை எழுப்பினர்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை