தமிழக செய்திகள்

மணிப்பூர் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள இல.கணேசனுக்கு தலைவர்கள் வாழ்த்து

மணிப்பூர் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள இல.கணேசனுக்கு முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

சென்னை,

மணிப்பூர் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள இல.கணேசனுக்கு முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் இல.கணேசனை போனில் தொடர்பு கொண்டு மணிப்பூர் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளதற்கு வாழ்த்து தெரிவித்தார். தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தும் போனில் தொடர்பு கொண்டு இல.கணேசனுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

இல.கணேசனுக்கு தெலுங்கானா ஆளுநர் டாக்டர் தமிழிசை வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், மணிப்பூர் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள தமிழக பா.ஜனதாவின் மூத்த தலைவரும் நான் பெரிதும் போற்றும் இல.கணேசனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டேன் என்று தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்