திருப்பத்தூர்,
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-
"பரிந்து கிடக்கும் அ.தி.மு.க. சக்திகள் ஒன்றிணைந்து, தமிழகத்தில் மீண்டும் 2026-ல் ஜெயலலிதாவின் ஆட்சியை அமைக்க வேண்டும். பிரிந்து கிடக்கும் சக்திகள் ஒன்றிணைய வேண்டும் என்பதுதான் தமிழக மக்களின் கருத்தாகவும், அ.தி.மு.க. அடிப்படை தொண்டர்களின் கருத்தாகவும் இருக்கிறது.
நம் தலைவர்கள் காட்டிய வழியில் செல்ல வேண்டும் என்றால், தமிழகத்தில் மீண்டும் ஜெயலலிதாவின் ஆட்சி அமைய வேண்டும் என்றால், தலைவர்கள் தங்கள் மனதில் இருக்கும் ஈகோவை விட்டுக்கொடுத்து, கழக நலன் கருதி ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்."
இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.