தமிழக செய்திகள்

சென்னை: சாலைகளின் சென்டர் மீடியனில் எல்.இ.டி. விளக்குகள் பொருத்தம் - விபத்துக்களை தடுக்க நடவடிக்கை

சாலைகளின் சென்டர் மீடியனில் எல்.இ.டி. விளக்குகளை பொருத்தம் பணியை போக்குவரத்து காவல்துறையினர் தொடங்கியுள்ளனர்.

தினத்தந்தி

சென்னை,

சென்னையில் இரவு நேரங்களில் ஏற்படும் விபத்துக்களை குறைத்து, உயிரிழப்புகள் ஏற்படாமல் தடுப்பதற்காக போக்குவரத்து போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

இதனிடையே இரவு நேரங்களில் சாலைகளின் நடுவே இருக்கும் சென்டர் மீடியன் வாகன ஓட்டிகளின் பார்வைக்கு தெரியாமல் போவதால், அதன் மீது சில வாகனங்கள் மோதி விபத்து ஏற்படுவது தொடர்கதையாகி வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சென்டர் மீடியனில் மோதி ஏற்பட்ட விபத்துகளில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனை தடுக்கும் விதமாக, சென்னையில் விபத்து ஏற்படும் பகுதிகள் அடையாளம் காணப்பட்டு அங்குள்ள சாலைகளின் சென்டர் மீடியனில் எல்.இ.டி. விளக்குகளை பொருத்தம் பணியை போக்குவரத்து காவல்துறையினர் தொடங்கியுள்ளனர். முதற்கட்டமாக கத்திப்பாரா பகுதியில் உள்ள சென்டர் மீடியனில் எல்.இ.டி. விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து