தமிழக செய்திகள்

சட்டப்பேரவை தேர்தல்; தொகுதி பங்கீடு குறித்து அதிமுக - பாஜக மீண்டும் பேச்சுவார்த்தை

சட்டப்பேரவை தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து அதிமுக - பாஜக இன்று 3-வது நாளாக மீண்டும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது.

சென்னை,

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ந்தேதி சட்டசபை தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தையில் ஈடுபடுகின்றனர்.

இந்நிலையில் சட்டசபை தேர்தலில் தொகுதி பங்கீடு தொடர்பாக அதிமுகவுடன் பாஜக இன்று 3-வது நாளாக மீண்டும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை தீவிரமாக நடந்து வருகிறது.

இந்த பேச்சு வார்த்தையில் அதிமுக சார்பில் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி மற்றும் வைத்திலிங்கம், கே.பி. முனுசாமி உள்ளிட்டோர் பங்கேற்ற்றுள்ளனர். பாஜக சார்பில் எல்.முருகன், கிஷண் ரெட்டி, கேசவ விநாயகம் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். அ.தி.மு.க கூட்டணியில் பா.ஜ.க-வுக்கு 25 முதல் 30 தொகுதிகள் ஒதுக்கீடு செய்ய வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்