சென்னை,
தமிழக சட்டப்பேரவைக்கு வருகிற ஏப்ரல் 6ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. ஒரே கட்டத்தில் நடத்தி முடிக்கப்படும் இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மே 2ந்தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது.
இதனைத்தொடர்ந்து தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. தேர்தல் தேதி அறிவிப்பு வெளியான நிலையில் அரசியல் கட்சிகள், கட்சிகளுடனான கூட்டணி, தேர்தல் பிரசாரம், வேட்பாளர் அறிவிப்பு உள்ளிட்ட பணிகளை தீவிரமுடன் தொடங்கி உள்ளன.
இந்நிலையில் சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பாக கூட்டணி கட்சிகளுடன் திமுக இன்று பேச்சுவார்த்தை நடத்த உள்ளது.
இதன்படி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி ஆகிய இரண்டு கட்சிகளுக்கும் இன்று மாலை கூட்டணி பேச்சுவார்த்தைக்கு வருமாறு திமுக அழைப்பு விடுத்துள்ளது.