பாலக்கோடு
தர்மபுரி மாவட்டம், பாலக்கேடு தாலுகாவுக்கு உட்பட்ட சாமனூர் கிராமம் அடர்ந்த வனபகுதியை ஒட்டியுள்ளது. நேற்று முன்தினம், இங்குள்ள வன பகுதியில் உள்ள ஜனப்பனூர் மலையில் சிறுத்தை நடமாடியது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து வனத்துறையினர் விரைந்து சென்று சிறுத்தை நடமாட்டம் குறித்து ஆய்வு செய்தனர். மேலும், வன பகுதிகளுக்கு கால்நடைகளை மேய்சலுக்கு கெண்டு செல்ல வேண்டாம் எனவும், கால்நடைகளை வெளியில் கட்ட வேண்டாம் என, எச்சரிக்கை விடுத்தனர். இதையடுத்து வனத்துறையினர் சிறுத்தை நடமாட்டம் குறித்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.