தமிழக செய்திகள்

தமிழகத்தில் 300-க்கும் கீழ் குறைந்தது தினசரி கொரோனா பாதிப்பு..!!

தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 300-க்கும் கீழ் குறைந்தது உள்ளது.

தினத்தந்தி

சென்னை,

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக வெகுவாக குறைந்து வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் புதிதாக 292 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழகத்தில் நேற்று 52 ஆயிரத்து 851 பேருக்குகொரோனா பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் இன்று 53 ஆயிரத்து 194 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 292 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இது நேற்றைய கொரோனா பாதிப்பு எண்ணிக்கையான 320 ஐ விட சற்று குறைவு.

கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 1 நபர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்ததையடுத்து, கொரோனாவால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 38,010 ஆக உயர்ந்துள்ளது.

அதே சமயம் கடந்த 24 மணி நேரத்தில் 778 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 34,08,373 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் தற்போது 3 ஆயிரத்து 950 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னையில் நேற்று 89 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியிருந்த நிலையில், இன்று 83 ஆக குறைந்தது.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது