தமிழக செய்திகள்

மனித உரிமையை மனிதர் பெறும் வரை உரிமைப் போர் தொடரட்டும் - மு.க.ஸ்டாலின்

மனித உரிமையை மனிதர் பெறும் வரை உரிமைப் போர் தொடரட்டும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

மனித உரிமையை மனிதர் பெறும் வரை உரிமைப் போர் தொடரட்டும் என்று தி.மு.க. தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், இந்தியா முழுவதும் விவசாயப் பெருங்குடி மக்கள் வீதிக்கு வந்து போராடுகிறார்கள். கொரோனா காலம் என்பதால் அடித்தட்டு ஏழை மக்கள் வாழ்வாதாரம் இழந்து நிற்கிறார்கள். மக்கள் உரிமைகள் முதல் மாநில உரிமைகள் வரை பட்டப்பகலில் பறிபோய்க் கொண்டு இருக்கிறது.

மனித உரிமை நாளை உண்மையில் கொண்டாடும் தகுதியை நாம் எப்போது பெறப்போகிறோம். மனித உரிமையை மனிதர் பெறும் வரை உரிமைப் போர் தொடரட்டும் என்று பதிவிட்டுள்ளார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து