சென்னை,
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
தாய் தமிழ்நாட்டுக்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்ட வலியுறுத்தி உண்ணாநிலை இருந்து உயிர் நீத்த தியாகி சங்கரலிங்கனாரின் நினைவு நாளில் அவரது தியாகத்தை போற்றுவோம்.
சங்கரலிங்கனாரை நேரில் சந்தித்து உறுதி அளித்தபடி தமிழ்நாடு என்று பெயர் சூட்டினார் பேரறிஞர் அண்ணா. வாழ்க தமிழ்நாடு.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.