இதுதொடர்பாக வேதாந்தா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
எங்களுடைய கோரிக்கையை ஆதரித்ததற்கும், நாட்டின் அவசர தேவைகளுக்கு சேவை செய்ய ஸ்டெர்லைட் காப்பருக்கு இந்த வாய்ப்பை வழங்கியதற்காக சுப்ரீம் கோர்ட்டுக்கும், மத்திய-மாநில அரசுகள் மற்றும் பொதுமக்களுக்கும் நாங்கள் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். எங்களுடைய ஆக்சிஜன் உற்பத்தி வசதிகளை செயல்படுத்துவதற்கு பாதுகாப்பான, நிலையான திட்டத்தை நாங்கள் இணைந்து தீட்டி வருகிறோம்.சுப்ரீம் கோர்ட்டின் வழிகாட்டுதலின் கீழ் அமைக்கப்படும் மேற்பார்வை குழுவுக்கு முழு ஒத்துழைப்பை வழங்குவோம். தேவையான அனைத்து முன்னெச்சரிக்கைகளை கருத்தில்கொண்டு, அவசர சூழலுக்கு ஏற்ப ஆக்சிஜனின் முக்கியமான தேவையை விரைவாக பூர்த்தி செய்வதில் நாங்கள் கவனம் செலுத்துவோம்.
மருத்துவ தர ஆக்சிஜனை உற்பத்தி செய்யும் நோக்கத்துக்காக மட்டுமே எங்கள் முழு உற்பத்தி திறனையும் கிடைக்க செய்வதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். மேலும் அரசின் தேவைகளுக்கு ஏற்ப முக்கியமான பகுதிகளுக்கு அனுப்பும் தளவாடங்களை எவ்வாறு தீர்ப்பது என்பது குறித்து ஏற்கனவே நிபுணர்களுடன் இணைந்து விவாதித்து வருகிறோம்.
ஆக்சிஜன் ஆலையை மீண்டும் விரைவாக செயல்படுத்துவதை நோக்கி தான் எங்களுடைய அனைத்து முயற்சிகளும் இருக்கின்றன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.