சென்னை,
ஜனநாயக சமுதாயத்தில் சுதந்திரமான மற்றும் பொறுப்பான பத்திரிகையின் முக்கியத்துவத்தைக் கொண்டாடும் வகையில், இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 16 அன்று தேசிய பத்திரிகை தினம் அனுசரிக்கப்படுகிறது.
இந்த நிலையில், தேசிய பத்திரிகை நாளையொட்டி முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் சமூகவலைதளத்தில் கூறி இருப்பதாவது;
'ஊடகத்தின் ஆற்றலையும் பொறுப்பையும் உணர்த்துவோம். சிலர் அரசியல் அழுத்தத்திற்கு அடிபணியும் சமயங்களில் சாய்வற்ற நேர்மையான ஊடகவியலை முன்னெடுத்து சுதந்திரமான ஊடகத்தின் மாண்புகளை உயர்த்திப் பிடிப்போம்' இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.