தமிழக செய்திகள்

நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும் இனி நடப்பவை நல்லவையாக அமையும்- துணை முதல்வர் ஓபிஎஸ்

2021ல் அதிமுகவை ஆட்சிக் கட்டிலில் அமர வைக்க வேண்டும் என்பதே இலக்காக இருக்க வேண்டும் என துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

தேனி,

தேனி பெரியகுளத்தில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

தொண்டர்கள், நிர்வாகிகள் கட்சிக்கு மட்டுமே விஸ்வாசமாக இருக்க வேண்டும். தொண்டர்கள் எனக்கு விஸ்வாசமாக இருக்க வேண்டும் என நான் எண்ணியதே இல்லை. எண்ணம் தூய்மையாக இருக்க வேண்டும். எடுத்து வைக்கும் அடியும் தூய்மையாக இருக்க வேண்டும்.

2021ல் அதிமுகவை ஆட்சிக் கட்டிலில் அமர வைக்க வேண்டும் என்பதே இலக்காக இருக்க வேண்டும் நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும், இனி நடப்பவை நல்லவையாக அமையும் என்றார்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு