தமிழக செய்திகள்

போதைப் பொருள் இல்லா தமிழகம் அமைப்போம் - எடப்பாடி பழனிச்சாமி

போதை பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி போதைப் பொருள் இல்லா தமிழகம் அமைப்போம் என கூறியுள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 26 ம் தேதியை உலக போதைப் பொருள் எதிர்ப்பு தினமாக உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.

இந்த தினத்தை முன்னிட்டு சில கருத்துகளை எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அதில் கூறியிருப்பதாவது;

நாட்டில் பெருவாரியான குற்றச்சம்பவங்களுக்கும், நம் சமூக சீர்குலைவுக்கும் காரணமான கொடிய போதைப் பொருள் புழக்கத்தை முற்றிலும் அகற்றி, நம்மையும், நம் குடும்பத்தையும் வளத்துடன் பாதுகாத்து, போதையற்ற தமிழகத்தை உருவாக்கிடுவோம்;

வருங்கால தலைமுறையான இளைஞர்களையும், மாணவச் செல்வங்களையும் போதையின் பாதைக்கு செல்லவிடாமல் நல்வழிப்படுத்துவது நம் கடமையென கொள்வோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்