தமிழக செய்திகள்

சி.பா.ஆதித்தனார் ஆற்றிய நற்பணிகளை நினைவுகூர்ந்து போற்றுவோம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

சி.பா.ஆதித்தனாரின் 120-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.

தினத்தந்தி

சென்னை,

'தமிழர் தந்தை' சி.பா.ஆதித்தனாரின் 120-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. பிறந்த நாளையொட்டி, அவரது சிலைக்கு அரசியல் கட்சி தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில், சி.பா.ஆதித்தனாரின் பிறந்த நாளையொட்டி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்து இருப்பதாவது;

"எளிய மக்களுக்கு உலக நடப்புகளைக் கொண்டு சென்று தமிழ் இதழியலின் முன்னோடிகளில் ஒருவராக விளங்கியவரும், கழக ஆட்சியில் சட்டப்பேரவைத் தலைவராகவும் அமைச்சராகவும் இருந்து அளப்பரிய சேவை புரிந்தவருமான சி.பா.ஆதித்தனார் அவர்களின் பிறந்தநாளில், அவர் ஆற்றிய நற்பணிகளை நினைவுகூர்ந்து போற்றுவோம்"

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்