சென்னை,
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் நினைவு தினத்தையொட்டி டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-
நவீன அறிவியல் நாயகன் அப்துல்கலாம் நினைவுநாள் (நேற்று)! தமிழும், அறிவியலும் அவர் இரு கண்கள். இளைஞர்களும் மாணவர்களும் அவரது நம்பிக்கைகள். அவர் விரும்பிய மனித சமுதாயம் அமைக்க உறுதியேற்போம். ஒவ்வொருவரும் தங்கள் வாழ்க்கையை நாட்டுக்காக அர்ப்பணிக்க வேண்டும் என்ற கலாம் வழி நடப்போம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.