தமிழக செய்திகள்

"தேசியத்தையும், தெய்வீகத்தையும் கண்ணாக காத்த முத்துராமலிங்க தேவரை வணங்குவோம்" - அண்ணாமலை டுவீட்

தேசியத்தையும், தெய்வீகத்தையும் கண்ணாக காத்த முத்துராமலிங்க தேவரை வணங்குவோம் என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழா, 60-வது குருபூஜை இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்பட்டு வருகிறது. தேவர் குருபூஜை விழாவையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள், அமைப்புகளை சேர்ந்தவர்கள் அவரது உருவ படத்திற்கு மரியாதை செலுத்தி வருக்கின்றனர்.

இந்த நிலையில், முத்துராமலிங்க தேவரின் 115வது ஜெயந்தி விழாவையொட்டி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை டுவிட்டரில் புகழாரம் சூட்டியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள பதிவில்,

"தெய்வத் திருமகனார் தேசத்தை நேசித்தார். தெய்வீகத்தை வளர்த்தார். ஆன்மீகத்தில் ஆழமான பற்றுக் கொண்டார். வீரத்தின் விளை நிலமானார். இல்லார்க்கு ஏழைப்பங்காளர். தேசியத்தையும் தெய்வீகத்தையும் கண்ணாக காத்த தெய்வத்திருமகனார் பசும்பொன் தேவர் அய்யாவை வான்புகழ வணங்கி ஆசி பெறுவோம்!" என்று பதிவிட்டுள்ளார்.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு