தமிழக செய்திகள்

விடுதலை சிறுத்தைகள் செயற்குழு கூட்டம்

விடுதலை சிறுத்தைகள் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

தினத்தந்தி

காரியாபட்டி, 

திருச்சுழி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகளுக்கான செயற்குழுகூட்டம் மாவட்ட செயலாளர் வக்கீல் இனியவன் தலைமையில் நடைபெற்றது.

இதில் மாநில துணை பொதுச்செயலாளர் கலைவேந்தன், மண்டல செயலாளர் வக்கீல் முருகன், மண்டல துணைச்செயலாளர் போத்திராஜன், துணைச் செயலாளர் ஜோசப், மாவட்ட பொருளாளர் சண்முகவேல், மாவட்ட துணைச்செயலாளர் பனைக்குடி பாக்கியராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொகுதி துணைச்செயலாளர் அம்பேத் வரவேற்றார்.

இந்த கூட்டத்தில் பூத் கமிட்டி உறுப்பினர்கள் நியமனம் செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது. கூட்டத்தில் காரியாபட்டி ஒன்றிய செயலாளர் பாண்டிய அரசு மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தினை காரியாபட்டி நகர செயலாளர் இளந்தமிழ் ஒருங்கிணைத்தார்.

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்