தமிழக செய்திகள்

விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

தென்காசியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தென்காசி:

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் குடிநீரில் மனித கழிவு கொட்டப்பட்டதை கண்டித்தும், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தென்காசி புதிய பஸ் நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் டேனி அருள்சிங் தலைமை தாங்கினார். வடக்கு மாவட்ட செயலாளர் குழந்தை வள்ளுவன், மாவட்ட துணைச் செயலாளர் சித்திக், மாவட்ட செய்தி தொடர்பாளர் சந்திரன், சங்கரன்கோவில் தொகுதி செயலாளர் பீர்மைதீன், கடையநல்லூர் தொகுதி செயலாளர் ஜான் தாமஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தென்காசி தொகுதி செயலாளர் பண்பொழி செல்வம் வரவேற்றார். நில உரிமை மீட்பு மாநில அமைப்பாளர் மேலூர் சசி, மண்டல செயலாளர் தமிழினியன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் நாடாளுமன்ற தொகுதி செயலாளர் வர்கீஸ், இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை மாவட்ட அமைப்பாளர் செல்லத்துரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...